கன்னியாகுமரி மேற்கு கடற்கரையில் கடல் சீற்றம்

கன்னியாகுமரி மாவட்டம், மேற்கு கடற்கரை பகுதிகளில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான பைபர் படகு மற்றும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீனவர்கள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம்…

கன்னியாகுமரி மாவட்டம், மேற்கு கடற்கரை பகுதிகளில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான பைபர் படகு மற்றும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை மீனவர்கள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் சுற்றுவட்டார
அரபிக்கடல் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றமும் காணப்பட்டு வந்தது. தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், குமரிக்கடல் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இதையும் படிக்க: ஓட்டுநர்களுக்கு ரூ.1,000 நிவாரணமா? – போக்குவரத்து ஆணையர் மறுப்பு!

இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நேற்று மாலை முதல்
பலத்த காற்று வீசிவந்த நிலையில் இன்று கடல் சீற்றத்துடனும் காணப்படுகிறது.
இதனால், குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாகக் கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க
செல்லவில்லை. படகுகளை துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.