யோகிபாபு நடிப்பில் உருவான பொம்மை நாயகி திரைப்படத்தின் ஓடிடி தள வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணை தயாரிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் பொம்மை நாயகி. ஷான் இயக்கிய இந்தப் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் பரியேறும் பெருமாள், கபாலி, ஜெய் பீம் படங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகை சுபத்ரா, யோகிபாபுவின் மனைவியாக நடித்துள்ளார். அறிவு, கபிலன், இளையகம்பன் மற்றும் சிலர் படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளார்கள். சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் கடந்த மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜீ5 தளத்தில், பொம்மை நாயகி திரைப்படம் வரும் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







