வீட்டில் கிளி வளர்த்த ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்!

உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி…

உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்த நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரு அலெக்சாண்டரியன் பச்சை கிளிகளை கிண்டி வனத் துறையினர் பறிமுதல் செய்து கிண்டியில் உள்ள நேசனல் சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.

2019ம் ஆண்டு தனது மனைவியின் தோழி ஒருவர் பணி மாறுதல் காரணமாக, அவர் வளர்த்து வந்த கிளிகளை தங்களிடம் வளர்க்கச் சொல்லி கொடுத்துச் சென்றதாகவும், கிளிகளுக்கு ’பிகில்’ மற்றும் ’ஏஞ்சல்’ என பெயரிட்டு வளர்த்து வந்ததாகவும் ரோபோ சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அழிவின் விளிம்பில் உள்ள பறவையினங்களின் பட்டியலில், 4வது வகையில் இருந்த பச்சை கிளிகள், கடந்த 2 மாததிற்கு முன்பாக 2வது வகையில் பட்டியிலடப்பட்டுள்ளது. இந்த வகை கிளிகளை வீடுகளில் வளர்ப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றமாகும். வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம், 1972 இல் பட்டியலிடப்பட்ட இந்தியப் பறவையான அலெக்ஸாண்ட்ரின் கிளி வளர்ப்பவர்கள் பிடிபட்டால், 6 மாத சிறைதண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

அதன்படி உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததன் காரணமாக நடிகர் ரோபோ சங்கருக்கு வனத்துறை சார்பில் ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.