’பழிவாங்கும் அரசியல் இல்லை’ – அமலாக்கத்துறை சோதனை குறித்து நிர்மலா சீதாராமன் கருத்து

சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பழிவாங்கும் அரசியல் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:…

சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பழிவாங்கும் அரசியல் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: சரியான முகாந்திரம் கிடைக்கும் போது மட்டுமே புலனாய்வு அமைப்புகள் சோதனையை மேற்கொள்கின்றன. அமலாக்கத்துறையாக இருந்தாலும் வருமான வரித்துறையாக இருந்தாலும் அவர்கள் முதலில் பல்வேறு கேள்விகளை அனுப்புகின்றனர். அந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்காத போது சோதனையை மேற்கொள்கின்றனர்.

இது பழிவாங்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி குறிப்பிடுகிறது. ஆனால் முறையான ஆதாரங்கள் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஊழல் குறித்து காங்கிரஸ் கட்சி பேசவே கூடாது.

அண்மைச் செய்தி: ’அதானி குழும மோசடி தொடர்பாக நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த வேண்டும்’ – பிரகாஷ் காரத்

காங்கிரஸ் கட்சி எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கு பிரதமர் நாடாளுமன்றத்தில் மிக விரிவாக பதிலளித்துவிட்டார். ஆனால், உண்மையை சகித்துக் கொள்ளமுடியாமல் அவர்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு இந்தியாவின் வளர்ச்சியை பற்றி கவலையில்லை. அவர்களுக்கு அவர்களுடைய குடும்பம், கட்சி நலனையே கருத்தில் கொண்டுள்ளனர்.  பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர விருப்பப்படுகிறதோ அவர்கள் அதை ஜிஎஸ்டி கவுன்சிலுக்குள் கொண்டுவரலாம். கவுன்சில் அதற்கான முடிவை எடுக்கட்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.