காஞ்சியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி!

காஞ்சிபுரம் பாலு செட்டிசத்திரம் பஜார் வீதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டிசத்திரம் பஜார் வீதியில் டாட்டா இன்டிகாஷ் என்ற தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது‌‌. இதில்…

காஞ்சிபுரம் பாலு செட்டிசத்திரம் பஜார் வீதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.

காஞ்சிபுரத்தை அடுத்த பாலுசெட்டிசத்திரம் பஜார் வீதியில் டாட்டா இன்டிகாஷ் என்ற தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது‌‌. இதில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் உள்ளே புகுந்து அங்கு உள்ள இரண்டு ஏடிஎம் இயந்திரங்களுக்கு மேலே உள்ள சிசிடிவி கேமராவினை கோணிப்பையை பயன்படுத்தி மூடிவிட்டு இரண்டு ஏடிஎம் இயந்திரங்களில் ஒன்றில் உள்ள கண்ட்ரோல் யூனிட்க்கு கீழே கதவினை திறந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

ஏடிஎம் பயன்படுத்தும் பொத்தான்களுக்கு கீழே உள்ள கண்ட்ரோல் யூனிட்டை முழுமையாக திறக்க முடியவில்லை. அப்போது பொதுமக்கள் நடமாட்டம் தெரிந்தவுடன் அங்கிருந்து திருடர்கள் தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் பாலு செட்டி சத்திரம் காவல் துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் காவல் துறையினர் மோப்ப நாயை வரவைத்து ஆய்வு செய்த பொழுது மோப்ப நாய் ஏடிஎம்  மையத்திலிருந்து  சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது.

தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் அந்த ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவினை காவல்துறையினர் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த இரண்டு ஏடிஎம் இயந்திரங்களில் இருந்த பணம் தப்பியது. காவல்துறையினர் தொடர்ந்து சிசிடிவி பதிவினை வைத்து மர்ம
நபர்களை தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.