அம்பேத்கர் 133வது பிறந்தநாள்; அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை

அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சட்டமேதை அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் இன்று (ஏப்.14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், அண்ணல்…

அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சட்டமேதை அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் இன்று (ஏப்.14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், அண்ணல் அம்பேத்கரின் உருவச் சிலை மற்றும் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சேலம் தொங்கும் பூங்கா பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் உருவச்சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அரசு கலைக்கல்லூரி சாலையிலிருந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதேபோல அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை கட்டமைத்த சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் 133வது பிறந்த நாளை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம், இந்தியத் தேசிய காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அம்பேத்கர் இயக்கத்தினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.