தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, மருத்துவ நல்வாழ்வுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சமூகநீதித்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில், இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. முன்னதாக, கூட்டத்தொடர் தொடங்கியதும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்து வருவது குறித்து திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தன.
இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதய்நிதி ஸ்டாலின், அத்தியாவசியப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்கிறது. அரிசி, பருப்பு, சர்க்கரை என எந்தப் பொருளை எடுத்தாலும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. ஏழை, எளிய மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். தவெக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலையேற்றத்தைப் பார்த்து பொதுமக்கள் மளிகைக் கடை பக்கமே போவதைக் குறைத்திருக்கிறார்கள். இது தொடர்பாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டம் நடத்தியுள்ளனர். கலைஞர் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பருப்பு, எண்ணெய், கடுகு, சீரகம் ஆகியவற்றை விலை குறைவாக வழங்கினார்கள். சர்க்கரை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கூடுதலாக வழங்கி அரசு ஆவணம் செய்ய வேண்டும். முதலமைச்சர் சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, விலைவாசி உயர்வுப் பிரச்னைக்கு நல்ல தீர்வு காண வேண்டும்.
இதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, சர்க்கரை விலை கிலோ 48 ரூபாயிலிருந்து 75 ரூபாயாக விற்பனையாகிறது. மிளகாய் ஒரு கிலோ 200 ரூபாய் இருந்த நிலையில், தற்போது 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எண்ணெயின் விலை 40 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் விலையேற்றம் ஏற்படும் போது, குறிப்பிட்ட உணவுப் பொருளைக் கொள்முதல் செய்து அதனை விற்பனை செய்தோம். அதற்காக விலை கட்டுப்பாட்டு நிதியாக 100 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு, விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். அதுபோல தவெக அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்று பேசினார்.
இதனையடுத்து, பாமக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி பேசினர்.
இந்தத் தீர்மானத்திற்கு விளக்கமளித்த உணவுத்துறை அமைச்சர் வெங்கயரமணன், பண்டிகைக் காலம் என்பதால் விலை அதிகமா? இல்லை, போர் என்பதால் விலை அதிகமா? இல்லை, விளைச்சல் குறைவால் விலை அதிகமா? என்பது குறித்து கண்காணித்து வருகிறோம்; அனைத்தையும் கவனித்து, விலைவாசி உயர்வை வெகு விரைவில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 49 அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கண்காணித்து வருகிறோம். மக்களுக்கு தங்குதடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எந்தப் பொருளின் விலை அதிகமாக இருக்கிறதோ, அதனைக் கண்டறிந்து, அதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறோம். ரேஷன் கடைகள் மட்டுமல்லாமல், பசுமைக் கடைகள் மூலமாகவும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். விலை உயர்வை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்றார்.




