கிராண்ட் செஸ் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தார் பிரக்ஞானந்தா!

இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா கிராண்ட் செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்தார்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் ‘கிராண்ட் செஸ் தொடர் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் உலகப் புகழ்பெற்ற பேபியானோ கருவானாவை, இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.

கிளாசிக்கல் சுற்றின் முடிவில் கருவானாவை விட 6 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் இருந்த பிரக்ஞானந்தா, இரண்டு ரேபிட் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முன்னிலை பெற்றார். பின்னர் அவர் பிளிட்ஸ் பிரிவிலும் சமநிலையைத் தக்கவைத்து, தனது ஒட்டுமொத்த வெற்றியை உறுதி செய்தார்.

இறுதி ஆட்டத்தை 15-13 என்ற புள்ளிக்கணக்கில் வென்றதன் மூலம் கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற பிரக்ஞானந்தாவுக்கு 200,000 டாலர் பரிசாக வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.