GOLD RATE | தங்கம் விலை சற்று குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது

தங்கம் விலை நாளுக்குநாள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த வாரம் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்ந்த வாரம் படிப்படியாக குறைந்து வருகிறது.  அதன்படி நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,940-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,520-க்கும் விற்பனை செய்யப்படுட்டது. அதேபோல வெள்ளி விலை மாற்றமின்றி ஒருகிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுட்டது.

அந்தவகையில் இன்று அதங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,200க்கும், கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,650க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி ஒருகிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.