வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பு!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்க்கு கூடுதல் பொறுப்பாக முதல்வரின் முகவரி துறை சிறப்பு அதிகாரி பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக உள்துறை செயலாளராக இருந்த பெ.அமுதா ஐஏஎஸ், வருவாய் மற்றும்…

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ்க்கு கூடுதல் பொறுப்பாக முதல்வரின் முகவரி துறை சிறப்பு அதிகாரி பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழக உள்துறை செயலாளராக இருந்த பெ.அமுதா ஐஏஎஸ், வருவாய் மற்றும் பேரிடர் துறைச் செயலாளராக கடந்த 16.07.2024 அன்று மாற்றம் செய்யப்பட்டார். அன்றைய தினமே சென்னை மாநகராட்சி ஆணையர் உள்பட மொத்தமாக ஒரே நாளில் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று (19.07.2024) மீண்டும் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ்.,க்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கடந்த  சில நாட்களுக்கு முன் அமுதா வருவாய் துறை செயலாளராக மாற்றப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.