அமெரிக்காவில் 2 விமானங்கள் மோதி விபத்து : இருவர் காயம்

அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில் இர்ண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்றுய் மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த கோபா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், யுபிஎஸ் சரக்கு விமானமும் மோதிக்கொண்டதில் 2 பேர் காயமடைந்தனர்.

சனிக்கிழமை இரவு சுமார் 9.15 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் (FAA) தகவலின்படி, கோபா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானத்தின் இறக்கை முனை, யுபிஎஸ் நிறுவனத்தின் போயிங் 767 ரக சரக்கு விமானத்தின் முன்பகுதியில் மோதியது.

இதற்கிடையே, கோபா விமானத்திற்கு வழிவிடுமாறு யுபிஎஸ் விமானத்தின் விமானிகளுக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்ததாக எஃப்ஏஏ தெரிவித்துள்ளது. இந்த மோதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.

கோபா விமானத்தில் இருந்த 166 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அந்த விமானம் மீண்டும் முனையத்திற்குத் திரும்பியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.