நாட்டில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக சில்லறை விற்பனை 79% குறைந்துள்ளதாக இந்திய சில்லறை விற்பனை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய சில்லறை விற்பனை அமைப்பான (Retailers Association of India (RAI)) நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொரோனா முதல் அலையின் போது நாட்டில் சில்லறை விற்பனை 49% குறைந்து காணப்பட்டது. தற்போது இரண்டாம் கொரோனா அலையில் சில்லறை விற்பனை 79% குறைந்த கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் சில்லறை விற்பனை 83 % குறைந்துள்ளது. கிழக்கு மாநிலங்களில் 75% தெற்கு மாநிலங்களில் 73 % சில்லறை விற்பனை குறைந்துள்ளதாக இந்திய சில்லறை விற்பனை அமைப்பு தெரிவித்துள்ளது.