2017-18ம் நிதியாண்டை ஒப்பிடும் போது நடப்பு நிதியாண்டில் சில்லறை பணவீக்கம்
இரட்டிப்பாக அதிகரித்து உள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில்
தெரிவித்துள்ளது.
மக்களவையில் உறுப்பினர் ஒருவர் இந்தியாவில் சில்லறை பணவீக்கம் அதிகரித்து
வருவதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துள்ளதா? பணம் வீக்கம் அதிகரிப்பதற்கான
காரணங்களை கண்டறியப்பட்டுள்ளதா? அதனை தடுப்பதற்கு மத்திய அரசு எடுத்துள்ள
நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து எழுத்து பூர்வமாக கேள்வி
எழுப்பியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதிலளித்துள்ள மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கடந்த 2017-18ம் ஆண்டில் இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 3.59% ஆக இருந்த நிலையில், 2018-19ல் 3.41% ஆகவும், 2019-20ல் 4.77% ஆக அதிகரித்து உள்ளது.
இதேபோல், 2020-21ல் 6.16% ஆகவும், 2021-2022ல் 5.51% ஆக இருந்துள்ளது. 2022-23ம் நிதியாண்டில் ஏப்ரல் மாதம் 7.79% ஆக சில்லறை பணவீக்கம் அதிகரித்து
இருந்தது. ஆனால், கடந்த அக்டோபர் மாத நிலவரப்படி இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 6.77% ஆக குறைந்துள்ளது.
ஆனால் 2017-18 நிதியாண்டை ஒப்பிடும் போதும் பணவீக்கம் இரட்டிப்பாகி உள்ளது. உலக அளவில் உயர்ந்து வரும் பொருளாதார நெருக்கடி பெருந்தொற்று காலம் ஆகியவை
பணவீக்கம் அதிகரித்த வழி வகுத்ததாகவும் இப்போது உக்ரைன் -ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாகவும் பணவீக்கம் அதிகரித்து உள்ளது.
இவை மட்டுமல்லாமல் இந்தியாவில் நீடித்த அதிக வெப்பாலை காலநிலை மாற்றம் மழை பொழிவு குறைந்தது ஆகியவையும் பண வீக்கத்திற்கான காரணம் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.