தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: சிபிஐ ஆதரவு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனி தீர்மானத்திற்கு சிபிஐ வரவேற்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தொகுதி முறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன், “தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டத்தை கூட்டினார். பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்.

மத்திய அரசு வரவுள்ள தொகுதி மறு வரை தொடர்பாக சட்டம் என் மக்கள் தொகை அடிப்படையில் கொண்டு வர கூட உள்ளது இது தென் மாநிலங்களுக்கு மிகவும் பாதிக்கப்படும். இந்த சட்டத்தினால் உத்தரபிரதேசம் செய்த மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் மட்டுமே பயன்பெறும்.

தொகுதி மறு சீர் அமைப்பு மூலம் நாடாளுமன்ற எண்ணிக்கை குறைந்தால் மாநிலங்களுக்கான குரல்கள் நசுக்கப்படும். மக்களவை மாநிலங்களவை 2.2: சதவீதம் உறுப்பினர் எண்ணிக்கை உள்ளது அதை அடிப்படையில் தொடர வேண்டும் என்று முதலமைச்சர் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறேன்” இவ்வாறு அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.