தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: தேமுதிக ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை!

தமிழ்நாடு சட்டபேரவையில் முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என பிரேமலதா விஅஜய்காந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தொகுதி முறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய தேமுதிக பொதுச்செயலாளரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், “ மத்திய அரசு தொகுதி மறு வரை தொடர்பாக சட்ட முன் வடிவு இதுவரையில் கொண்டுவரப்படவில்லை. அதற்கு முன்பாக இந்த தீர்மானம் எதற்கு?. பல்வேறு மாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகமாக உள்ளது அதன் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.

மத்திய மாநில அரசுகள் இணைந்து ஒன்று சேர எம்பிகள் எண்ணிக்கை உயர்த்தினால் மட்டுமே வைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீத எம்பிகள் கிடைப்பார்கள். 543 எம்பிக்கள் உள்ள நிலையில் 815 எம்பிக்கள் வாய்ப்பு இருக்கும் . மூலம் தமிழ்நாட்டிற்கு 59 எம்பிக்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. 10 லட்சம் மக்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தான் இருக்கிறார்கள் , இந்த தொகுதி மறு வரை மூலமாக 7 லட்சம் மக்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இருப்பார். இதனால் மக்கள் பிரச்சனை அதிகம் பேச முடியும். அது சிறப்பாக இருக்கும்.

33 சதவீத பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறேன். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆக இருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெண்களுக்கான மாநாடு நடத்தி அதன் மூலம் செய்தவர். பெண்கள் எல்லாம் இடத்திலும் மிகச் சிறப்பான முறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது அரசியலில் அவர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இந்த அவையில் அதிக பெண்கள் இருப்பதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது 543 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள் அவர்களின் 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதாவின் அடிப்படையில் 113 பெண்கள் இருக்க வேண்டும். 815 எம்பி களில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு மூலம் 215 பெண் எம்பிகள் கிடைப்பார்கள். பிரேமலதா இந்த தீர்மானத்திற்கு ஆதரவும் தெரிவிக்கவில்லை எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.