பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று தனுஷின் வாத்தி பட இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டம் சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் வெங்கி அட்லூரி, நடிகர் ஷாரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாத்தி படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வெங்கி அட்லூரி, “8 நாட்களில் வாத்தி திரைப்படம் ரூ.75 கோடி வசூல் செய்துள்ளது. இதை விட வேறு என்ன வேண்டும். இந்த வெற்றியைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. ஒவ்வொருவரின் கருத்தும் தான் இந்த வெற்றிக்கு காரணம். என்னுடைய தயாரிப்பாளரால் வர முடியவில்லை. அவர் பணம் எண்ணிக்கொண்டு இருப்பதால் அவரால் இங்கு வர முடியவில்லை. தனுஷுடன் வேலை செய்தது சிறப்பாக இருந்தது. அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்று தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : மகளிர் உரிமைத் தொகை எப்போது? – ஈரோடு பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நிகழ்ச்சிக்குப் பின் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த இயக்குநர் வெங்கி அட்லூரி, ”எனது பார்வையில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும். இந்தியாவில் கல்வி முறை சிறப்பாக உள்ளது. ஆனால் விலை உயர்ந்ததாக உள்ளது. முன்னேறி உள்ளது. அரசுப் பள்ளிகள் சிறப்பாக உள்ளன. வட மாநிலங்களில் உள்ள பள்ளிகளை நான் பெரிய அளவில் பார்த்ததில்லை. தென்னிந்திய பள்ளிகள் மீதுதான் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது. தமிழ்நாடு பற்றி எனக்கு அதிகம் தெரியாது. தமிழ்நாட்டில் உள்ள இடஒதுக்கீடு சூழல் பற்றியும் எனக்கு முழுமையாக தெரியாது.
நான் ஏற்கனவே சொன்ன கருத்து இங்கு சர்ச்சையாகி உள்ளது. அதுபற்றி நான் அதிகம் பேசவில்லை. பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். கல்வி எல்லோருக்கும் சென்றடைய வேண்டும். இதுதான் என்னுடைய கருத்து. அதுதான் நாட்டின் வளர்ச்சி. சமூகத்தின் வளர்ச்சி. என்னுடைய நோக்கமும் அது தான்” என்று தெரிவித்தார்.