விழுப்புரம் குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைது செய்யபட்ட நிர்வாகி ஜீபின்பேபி உள்ளிட்ட 8 பேரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.
குண்டலப்புலியூர் ஆசிரம விவகாரத்தில், அதன் உரிமையாளர் ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், மேலாளர் கேரளாவை சேர்ந்த பிஜூமோகன், பணியாளர்களான அய்யப்பன், கோபிநாத், முத்துமாரி, விழுப்புரம பூபாலன், சதீஷ், தாஸ் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர்கள் 8 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 23 ஆம் தேதி சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரனை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வந்தபோது நீதிபதி புஷ்பராணி முன் வந்தது.
அப்போது அன்புஜோதி ஆசிரம நிர்வாகி கையில் காயம் இருக்கவே, அது எவ்வாறு ஏற்பட்டது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு போலீசார் குரங்கு கடித்ததால் ஏற்பட்ட காயம் என்றும் தற்போது குணமாகி விட்டதாக மருத்துவரின் அறிக்கையை நீதிபதி புஷ்பராணியிடம் சமர்பித்தனர்.
அதனை தொடர்ந்து 8 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரனை செய்ய அனுமதித்து உத்தரவிட்டார். விசாரனை முடிந்த பின்பு வரும் 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு 8 பேரையும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.