முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் வணிகம்

ரெப்போ வட்டி விகிதம் அதிகரிப்பு: ஏற்படப்போகும் பாதிப்புகள் என்னனென்ன?


தங்கபாண்டியன். இரா

கட்டுரையாளர்

10 மாதங்களில் 6-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்து ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால், ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்ட முடிவுகளை ஆளுநர் சக்தி காந்த தாஸ் வெளியிட்டார். அதன்படி, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை பூஜ்ஜியம் புள்ளி 25 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடப்பு நிதியாண்டில் 10 மாதங்களில் 6-ஆவது முறையாக ரெப்போ ரேட் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை அடுத்து, இனி வங்கிகளில் கடனுக்கான வட்டியும், தவணையும் உயரும்.

ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து, 6.50 சதவீகிதமாக உயர்கிறது. இதனால் சில்லறை கடன்,வீட்டு கடன், வாகன கடன், தொழில் கடன் மற்றும் இதர கடன் வாங்கியவர்கள், செலுத்தும் மாதாந்திர தவணை தொகை அதிகரிக்கும்.

கடந்த மே மாதம் ரெப்போ வட்டி விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 40 சதவீதம் அதிகரித்து 4 புள்ளி 40 சதவீதமாகவும், ஜூன் மாதம் பூஜ்ஜியம் புள்ளி 50 சதவீதம் அதிகரித்து 4.90 சதவீதமாகவும் உயர்ந்தது. ஆகஸ்ட் மாதம் பூஜ்ஜியம் புள்ளி 50 சதவீதம் அதிகரித்து 5.40 சதவீதமாகவும், செப்டம்பர் மாதம் பூஜ்ஜியம் புள்ளி 50 சதவீதம் அதிகரித்து 5.90 சதவீதமாகவும் அதிகரித்தது.

டிசம்பர் மாதம் பூஜ்ஜியம் புள்ளி 35 சதவீதம் அதிகரித்து 6.25 சதவீதமாக ரெப்போ ரேட் இருந்தது. பிப்ரவரி மாதமான தற்போது பூஜ்ஜியம் புள்ளி 25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. இதனால் ரெப்போ ரேட் 6.50 சதவீதமாக உள்ளது. கடந்த 10 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதம் இரண்டரை சதவீதம் வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.

நிதிக்கொள்கை முடிவுகளுக்கு பின் சக்தி காந்த தாஸ் மேலும் பேசுகையில்.. கடந்த 3 ஆண்டுகளில் உலகளவில் ஏற்பட்ட மாற்றங்கள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளையும், போக்கிலும் எதிரொலிக்கிறது..

உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் சில மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போல் இப்போது மோசமாக இல்லை, உலக பொருளாதாரத்தில் வளர்ச்சியின் அறிகுறிகள் தென்படுகின்றன.அதே போல் பணவீக்கமும் இறங்குமுகமாக உள்ளது. என்றார். டிஜிட்டல் பண பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்த,இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள் இந்தியாவில் இருக்கும் போது பணப்பரிமாற்றத்திற்கு இந்திய அரசின் சேவை தளமான UPI சேவையை பயன்படுத்த ரிசர்வ் வங்கி வலியுறுத்தும்.

இத்திட்டத்தின் துவக்கமாக ஜி20 மாநாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு நாட்டின் முக்கியமான விமான நிலையத்தில் யூபிஐ சேவையை பயன்படுத்துவதற்கான வசதி அளிக்கப்படும். ஆசிய நாணயங்களில் அதிகம் பாதிக்கப்படாத நாணயங்களில் இந்திய ரூபாயும் ஒன்று. அதே போல் , நாட்டின் 12 நகரங்களில் நாணயங்களை புழக்கத்திற்குக் கொண்டு வரும் காயின் வென்டிங் மெஷின்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.இந்த காயின் வென்டிங் மெஷின்-ஐ QR கோட் வாயிலாக பயன்படுத்த முடியும். இந்தியாவில் போதுமான பணப்புழக்கம் உள்ளது எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியா வெளீநாடுகளீல் வாங்கிய எக்ஸ்டர்னல் கடன் விகிதம் சர்வதேச அளவீடுகளைக் காட்டிலும் குறைவாக உள்ளது. அரசு பத்திர சந்தையின் வர்த்தக நேரத்தை வழக்கத்தைப் போல் காலை 9 முதல் மாலை 5 வரையில் இயங்கும். உணவு பணவீக்க சரிவால் நுகர்வோர் பணவீக்கம் குறைந்துள்ளது. 2023 ஆம் நிதியாண்டுக்கான பணவீக்கம் 6.7 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. அன்னிய நேரடி முதலீடுகள் ஏப்ரல் – டிசம்பர் காலக்கட்டத்தில் 22.3 பில்லியன் அமெரிக்க டாலர் உயர்ந்துள்ளது.. 2024 ஆம் நிதியாண்டில் நுகர்வோர் பணவீக்கம் 5.3 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது .2023-24 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். இந்தியாவில் போதுமான பணப்புழக்கம் உள்ளது

மொத்த உள்நாட்டு வளர்ச்சியானது, நடப்பு நிதியாண்டில் 7 சதவீதமாகவும், அடுத்த நிதியாண்டான 2023-24 ஆம் ஆண்டில் 6.4 சதவீதமாக இருக்கும் எனவும் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்

ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

முஸ்லீம் லீக், மமகவுடன் திமுக இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!

EZHILARASAN D

ரசிகர்களுடன் படம் பார்த்த தனுஷ், அனிருத்!!

G SaravanaKumar

நமது நாட்டின் பெருமைமிக்க சாதனைகளை கொண்டாடும் நேரம் இது-ஆளுநர் ரவி உரை

Web Editor