பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட
பாடல்களை பாடியவர் வாணி ஜெயராம். இவர் சிறந்த பின்னணி பாடகிக்காக 3 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அண்மையில் கூட மத்திய அரசு அவருக்கு பத்மபூஷன் விருதை அறிவித்திருந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், வாணி ஜெயராம் கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்தனர். மேலும் 30 குண்டுகள் முழங்க காவல் துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், வாணி ஜெயராம் தனது வீட்டில் மர்மான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பாடகி வாணி ஜெயராம் இறப்பு தொடர்பாக ஆயிரம் விளக்கு காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில், உறவினர் ஸ்ரீராம் என்பவர் ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 4-ம் தேதியே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வாணி ஜெயராம் நெற்றியில் காயத்துடன் ரத்தம் உறைந்த நிலையில் கட்டிலின் அருகில் இருந்த டீபாயில் இடித்து அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இல்லை என்று ஸ்ரீராம் கொடுத்த புகாரை முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். குற்றவியல் நடைமுறை சட்டப்பபிரிவு 174 என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.