ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் அதிகரிப்பு: வீட்டு கடனுக்கான வட்டி உயருமா?

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் அதிகரித்து 4.9 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. பண வீக்கம் காரணமாக, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி  விகிதம் (ரெப்போ ரேட்)…

பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் அதிகரித்து 4.9 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

பண வீக்கம் காரணமாக, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி  விகிதம் (ரெப்போ ரேட்) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதை கட்டுப்படுத்தும் விதமாக ரெப்போ ரேட் விகிதம் 0.5 சதவீதம் அதிகரித்து 4.90 ஆக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.

இதற்கு முன்பு கடந்த மாதத் தொடக்கத்தில் 0.40 சதவீதத்தை உயர்த்தி ரெபோ ரேட்டை 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக ரெப்போ ரேட்டை ரிசர்வ் வங்கி உயர்த்தியது. உக்ரைன் – ரஷியா போர் விளைவாக ஏற்பட்ட பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.4 சதவிகிதம் உயர்த்தியதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று மேலும் 0.5 சதவீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இதனால், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயர வாய்ப்புள்ளது.

Image

மணிகண்டன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.