நடிகர் கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள விக்ரம் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படத்துக்கு ரசிகர்களும், திரையுலகப் பிரபலங்களும் தொடர்ந்து பாராட்டு மழை பொழிந்து வருகின்றன.
இந்நிலையில், இந்தப் படத்தை பார்த்துவிட்டு தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வரும் ஷங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
கமல்ஹாசன் சாரை பெரிய திரையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஓர் உண்மையான லெஜண்ட். இயக்குநர் லோகேஷன் கனகராஜின் கடின உழைப்பு படத்தில் தெரிகிறது. சோர்வை ஏற்படுத்தா வண்ணம் குறிப்பிட்ட இடைவெளியில் படம் வேகம் எடுக்கிறது. அனிருத் உண்மையான ராக் ஸ்டார் என்பதை நிரூபித்துள்ளார். அன்பறிவின் சண்டை பயிற்சி சிறப்பாக உள்ளது. படத்தில் நடித்த நடிகர்களுக்கும், மொத்த டீமுக்கும் எனது பாராட்டுகள் என்று அந்தச் செய்தியில் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.
மாஸ்டர், மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காயத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். உலகமெங்கும் வெளியாகியுள்ள படம் மிகப் பெரிய வசூலை குவித்து வருகிறது.
https://twitter.com/shankarshanmugh/status/1534219471375593472
-மணிகண்டன்








