திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
108 திவ்யஸ்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கத்தில் மாதம்தோறும்
திருவிழாக்கள், வைபவங்கள் நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் நவராத்திரி விழா
உற்சவம் துவங்கி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது .
விழாவை முன்னிட்டு பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைவார்.
கொலு மண்டபத்தில் இரவு 7.45 மணிக்கு தொடங்கி இரவு 8.45 மணி வரை சிறப்பு
பூஜைகள் நடைபெறும் – இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10
மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைவார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7-ம் திருநாளான 21-ந் தேதியன்று ஆண்டுக்கு
ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெற உள்ளது . பின்னர்
விழாவின் 9-ம் நாளான 23-ந்தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறை
வடைகிறது.







