முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் – அரசாணை வெளியீடு

சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  

அண்மையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்தது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சீர்காழியில் 122 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்து. இந்த வரலாறு காணாத கனமழை காரணமாக 32 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த இடங்களை கடந்த நவம்பர் 14ஆம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் நிவாரண உதவிகளும் வழங்கினார். பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்க ரூ.16 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு

Jeba Arul Robinson

சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற மநீம வலியுறுத்தல்

Web Editor

பட்ஜெட் திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா? பிரேமலதா கேள்வி

Nandhakumar