தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

பி.டி.எஸ் கருவிகள் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும்…

பி.டி.எஸ் கருவிகள் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பி.டி.எஸ் கருவிகள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்யும் 5 தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுத்துறை நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யும் அருணாச்சலம் இம்பெக்ஸ், காமாட்சி அன் கோ உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வந்த புகாரை அடுத்து வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் மட்டும் 7 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. தண்டையார்பேட்டை, மண்ணடி போன்ற பகுதிகளில், இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.