சென்னை தியாகராய நகரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நிவாரண உதவிகளை வழங்கினார்.
கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால், சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த சசிகலா, தி.நகர் கிரியப்பா குடியிருப்பு வாசிகளுக்கு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசு சாலைகளில் நீர் தேங்காமல் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், உரிய நேரத்தில், மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கவேண்டுமெனவும், கேட்டுக்கொண்டார். அதே போல மத்திய அரசு உடனடியாக வெள்ள நிவாரண நிதியை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து இன்று பல்வேறு கட்சிகளை சார்ந்த பல அரசியல் கட்சி தலைவர்களும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன பொருட்க்களை வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







