மழையால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழையால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க, மாவட்ட ஆட்சியர்கள், பல்துறை மண்டலக் குழுக்களை அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும் எனவும், முகாம்களில் உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நெடுஞ்சாலைத்துறை, நீர் வளத்துறை, மின்வாரியம், தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை உள்ளிட்ட துறைகள் களப்பணியாற்ற தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.