சர்வதேச செஸ் போட்டிகளில் வெற்றி பெற்று உலகத்தின் நம்பர் ஒன் செஸ் வீரராக வர வேண்டும் என்பதே தனது லட்சியம் என இளம் வீரர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.
செஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வரும் இளம் வீரரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தாவிற்கு அண்மையில் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் பள்ளி நிர்வாகம் சார்பாக பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வந்த பிரக்ஞானந்தாவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர்கள் சேகர்பாபு, மெய்யநாதன் ஆகியோர் 10 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி வாழ்த்து கூறினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, தனக்கு அர்ஜுனா விருது கிடைத்த மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். சர்வதேச செஸ் போட்டிகளில் வெற்றி பெற்று, ரேங்கிங் வரிசையில் முன்னேறி உலகத்தின் நம்பர் ஒன் செஸ் வீரராக வர வேண்டும் என்பதே தனது இலக்கு எனவும் அவர் தெரிவித்தார்.