காதலிக்க மறுத்த மாணவி: கல்லால் அடித்துக் கொன்ற இளைஞர்!

ஆத்தூர் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தலையில் கல்லால் அடித்து கொடூர கொலை செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியைச்…

ஆத்தூர் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை தலையில் கல்லால் அடித்து கொடூர கொலை செய்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சி மேலவீதி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். மாற்றுத் திறனாளியான இவருக்கு ஜெயலட்சுமி என்கிற மனைவியும், நந்தினி, ரோஜா என்கிற இரண்டு மகள்களும், விஜய் என்கிற ஒரு மகனும் உள்ளனர்.முருகேசன் கூடமலையில் இருந்து கடம்பூர் செல்லும்
சாலையில் உள்ள சின்னசாமி என்பவருடைய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து
குடும்பத்துடன் தோட்டத்திலேயே தங்கி விவசாயம் செய்து வருகிறார். முருகேசனின்
இரண்டாவது மகள் ரோஜா ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. தமிழ்
இரண்டாம் ஆண்டு [ஆசிரியர் பயிற்சி] படித்து வருகிறார்.

இதனிடையே ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்த
நீலக்கிருஷ்ணன் மகன் சாமிதுரை கூடமலையில் உள்ள தனது பெரியப்பா சின்னதுரையின் வீட்டிற்குச் சென்றபோது கல்லூரி மாணவி ரோஜாவை பார்த்துள்ளார், அப்போது மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். அடிக்கடி மாணவியின் ஊருக்குச் சென்ற சாமிதுரை பேருந்தில் கல்லூரிக்குச் செல்லும்போது மாணவியை காதலிக்க வலியுறுத்தி கட்டாயப்படுத்தியுள்ளதோடு திருமணம் செய்ய வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் மாணவியின் உறவினர்களுக்கு தெரியவந்ததால் ஊரின் முக்கியஸ்தர்களை அழைத்து பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர். இதற்கு
சாமிதுரையின் உறவினர்கள் இனி சாமிதுரை கூடமலை பகுதிக்கு வரமாட்டார் என
உத்திரவாதம் அழித்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பஞ்சாயத்து செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜாவின் வீட்டில் ஆட்கள் இல்லாததை
நோட்டமிட்டு தோட்டத்திற்கு சென்று வீட்டின் பின்புற பகுதியில் பதுங்கியுள்ளார். இருட்டு கட்டியபோது வீட்டில் இருந்து வெளியே வந்த ரோஜாவை தன்னை காதலித்து திருமணம் செய்துகொள், இல்லையென்றால் உன்னை கொன்று விடுவேன்
எனக் கூறியுள்ளார்.

இதற்கு ரோஜா மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சாமிதுரை மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை மேலே ஊற்றியுள்ளார். பின்னர், ரோஜாவை கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து மிதித்துக் கொண்டு கல்லை
தூக்கி தலையில் போட்டு கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதைத் தடுக்க முயன்ற குடும்பத்தினரையும் கீழே தள்ளிவிட்டு கொடூரமாக
தாக்கியுள்ளார்.

உடனே ரோஜாவை மீட்டு சிகிச்சைக்காக கூடமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு
கொண்டு சென்றுள்ளனர். அங்கு ரோஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சமபவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இறந்துபோன ரோஜாவின் உறவினர்களிடம் டிஎஸ்பி ராமச்சந்திரன் விசாரணை மேற்கொண்டபோது, கொலையை யார் நேரில் பார்த்தீர்கள். அவர்கள் மட்டும் இருங்கள். மற்றவர்கள் அன்னைவரும் கலைந்து செல்லுங்கள் என கூறியதால் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை செய்தி
எடுக்கவிடாமல், நீங்கள் புலனாய்வு செய்ததுபோதும் காலையில் வந்து செய்தி
எடுத்து கொள்ளுங்கள் என்றும், முதலில் இங்கிருந்து கிளம்புங்கள் எனக் கூறி
செய்தியாளர்களை அவமதிப்பு செய்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது.

காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை வாலிபர் கல்லால்
தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.