சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்து மகிழ்ந்த கமல்ஹாசன்

விக்ரமில் நடித்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை நடிகர் கமல்ஹாசன் பரிசாக வழங்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 5…

விக்ரமில் நடித்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை நடிகர் கமல்ஹாசன் பரிசாக வழங்கியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த வரவேற்ப்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான ‘விக்ரம்’, 2022-ஆம் ஆண்டு வெளியான தமிழ் படத்தில் ‘விக்ரம்’ அதிக வசூலை குவித்து வரும் படமாக உள்ளது.

தொடர்ந்து கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், விக்ரமில் நடித்த சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை நடிகர் கமல்ஹாசன் பரிசாக வழங்கியுள்ளார். அவர் வழங்கியுள்ள வாட்ச் விலை, ரூபாய் 50 லட்சம் என கூறப்படுகிறது. இந்நிலையில், ரோலக்ஸ்க்கு ரோலக்ஸ் வாட்ச் வழங்கியுள்ளார் கமல்ஹாசன் என அவரது ரசிகர்கள் சூர்யா புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அண்மைச் செய்தி: ‘தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பரவல் – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செயலாளர் ராதாகிருஷ்ணன்’

இதற்குமுன்பு, லோகேஷ் கனகராஜ்-க்கு லக்சஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கினார் நடிகர் கமல்ஹாசன். அதனைத்தொடர்ந்து, உதவி இயக்குநர்கள் 20 பேருக்கு அப்பாச்சி 160 ஆர்டிஆர் பைக்கையும் அவர் வழங்கினார் இந்த செய்திகள் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. முன்னதாக, ‘விக்ரம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடித்தத்தில் “அயராது விழித்திருங்கள், தனித்திருங்கள். பசித்திருங்கள் உங்கள் அன்ன பாத்திரம் என்றும் நிறைந்திருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Video Link : https://www.youtube.com/watch?v=FFVeRn51T1w

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.