புதுக்கோட்டை மாவட்டத்தில் பழமையான 100 பள்ளிக்கட்டிடங்களை இடிக்க, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி. சத்தியமூர்த்தி, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
பாதுகாப்பான பள்ளி கட்டடங்களை உறுதி செய்யும் நோக்கில் சிறப்பு முன்னெடுப்பை நியூஸ் 7 தமிழ் எடுத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், நெல்லையில் பள்ளி சுற்றுச் சுவர் கட்டம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமும் ஒன்று. நியூஸ் 7 தமிழ் எடுத்துள்ள முன்னெடுப்பின்படி உங்கள் மாவட்டங்களில் உள்ள மோசமான பள்ளி கட்டிடங்கள் குறித்த தகவல்களை சேகரித்து அரசுக்கு தெரியப்படுத்துவதே எங்கள் நோக்கம் என்று அறிவித்திருந்தது. இதற்காக பிரத்யேகமாக WhatsApp எண் ஒன்றையும் நியூஸ் 7 அளித்துள்ளது.
உங்கள் பகுதியில் உள்ள மோசமான பள்ளி கட்டடங்கள் குறித்த புகைப்படங்கள்/வீடியோக்களை 77082 44175 என்ற எண்ணிற்கு அனுப்புலாம் கூறப்பட்டுள்ளது. அதை நியூஸ் 7 தமிழ் செய்தியாக வெளியிட்டு அரசுக்கு தெரியப்படுத்தும் என்று தெரிவித்திருந் தது. அதன்படி பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 பள்ளி கட்டிடங்களை இடிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி. சத்தியமூர்த்தி, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் 1570 அரசு பள்ளிகளும் 330 அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளும் உள்ளன. இதில் 259 தொடக்க நடுநிலைப் பள்ளிகளும் 67 உயர்நிலை மேல்நிலைப் பள்ளியும் பழமையான கட்டிடங்களில் நடந்து வருவது தெரியவந்தது. இதில் முதல் கட்டமாக 100 பள்ளி கட்டிடங்களை இடிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி. சத்தியமூர்த்தி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்துள்ளது.








