முக்கியச் செய்திகள் தமிழகம்

முழுமையாக சேதமடைந்த பள்ளிக்கட்டிடங்களை அகற்ற மதுரை ஆட்சியர் உத்தரவு

முழுமையாக சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை அகற்ற மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலியில் தனியார் பள்ளியின் கழிவறைச் சுற்றுச்சுவர் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நியூஸ் 7 தமிழ், பாதுகாப்பான பள்ளிக் கட்டடங்களை உறுதி செய்யும் நோக்கில் சிறப்பு முன்னெடுப்பை எடுத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி, உங்கள் மாவட்டங்களில் உள்ள மோசமான பள்ளிக் கட்டிடங்கள் குறித்த தகவல்களை சேகரித்து அரசுக்கு தெரியப்படுத்துவதே எங்கள் நோக்கம் என்று நியூஸ் 7 தமிழ் அறிவித்திருந்தது. இதற்காக பிரத்யேகமாக 77082 44175 என்ற WhatsApp எண்ணையும் அளித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் புகைப்படங்களையும் தகவல்களையும் வீடியோக்களையும் அளித்து வருகின்றனர்.

அனிஸ் சேகர்

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் 200 பள்ளி கட்டிடங்கள் பழமையானவை என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. அந்தக் கட்டிடங்களை அகற்ற மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். 120 வகுப்பறை கட்டிடங்களும், 80 கழிவறை கட்டிடங்களும் சேதமடைந்த நிலையில் உள்ளதாகவும் அங்கு மாணவர்கள் சொல்லாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் முழுமையாக சேதமடைந்த கட்டிடங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆக்சிஜனை இயற்கையிடம் திருப்பி கொடுங்கள் : நாக்பூர் மருத்துவமனை

Halley Karthik

பெகாசஸ் தொழில்நுட்பத்தால் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர்: என்.எஸ்.ஓ தன்னிலை விளக்கம்

Vandhana

ஃபரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்

EZHILARASAN D