தமிழ்நாடு அரசின் தடுப்பூசி கொள்முதல் டெண்டரில் யாரும் பங்கேற்காததால் மறு டெண்டர் அறிவிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உதகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி கட்டடப் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து பழங்குடியினர் கிராமத்தில் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் தடுப்பூசி கொள்முதல் டெண்டரில் யாரும் பங்கேற்காததால் மறு டெண்டர் அறிவிக்கப்படும் என்றும், செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் சாதகமான முடிவு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.







