லைப் ஸ்டைல்

ட்ரெண்டாகி வரும் Club House செயலி!

தற்போது இணைய பக்கம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஓர் செய்தி என்னவென்றால் Club House எனும் புதிய செயலிதான். தற்போது அவை இணையத்தில் பேசுபொருளாகவும் விவாத பொருளாகவும் உருவெடுத்துள்ளது.

‘மாறும் என்ற வார்த்தை மட்டும்தான் மாறாது’ என்ற உலகின் தலைசிறந்த தத்துவத்தின்படி ஒரு தலைமுறை அடுத்த கட்டத்திற்கு நகரும்போது மாற்றங்கள் ஏற்படுவது இயல்பே, அது அனைத்திற்கும் பொருந்தும். தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை சில ஆண்டுகள், சில மாதங்கள், சில நாட்கள், சில மணி நேரத்தில் கூட அடுத்த கட்ட UpDate version முழுவதும் பழைய தொழில்நுட்பத்தை அழித்து விடும். மக்கள் பயன்பாட்டிற்குத் தேவையான தொழில்நுட்பம் ஒரு பக்கம் இருந்தாலும், பொழுது போக்கிற்கான செயலிகளைத்தான் நாம் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

90களின் இறுதியில் Yahoo Messenger பின் Orkut என வந்தாலும் சில ஆண்டுகளிலேயே அவை காணாமல் போனது. பின் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என ஏராளமான பொதுத்தளம் மனிதர்களின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தது. இதனை பின்னுக்குத் தள்ள சில ஆண்டுகள் எந்த தொழில்நுட்பத்தாலும் முடியாது என்பதே நிசப்தமான உண்மை. ஆனாலும் சில சில செயலிகள் வரும் சில காலம் பேசப்படும் பின் காணாமல் போகும் அவ்வாறாகத் தற்சமயம் இணையவாசிகளால் பேசப்பட்டு வரும் செயலிதான் Club House எனும் புதிய செயலி.

பொதுவாக இந்தியர்கள் எந்த பிரச்சினைகள் வந்தாலும் கடந்த சென்றுவிடுவார்கள். அதுபோலத்தான் கொரோனாவும், உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்தாலும் உலக சுகாதார மையம் கொரோனோவோட வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் இந்தியர்கள் கொண்டாடப் பழகிக் கொண்டவர்கள்.நோய், வேலையின்மை,பொருளாதார சூழல் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் சிலருக்கு Facebook கவலைகள் மறக்கும் இடமாகவே உள்ளது.வெறுமனாக சென்று கொண்டிருக்கும் முகப்புத்தகத்தில் திடீருனே எதாவது ட்ரெண்ட் ஆகும்.

‘ போடுடா வெடிய’ என்று அனைவரும் அந்த ட்ரெண்டை Follow செய்வார்கள்.

சில தினங்களாக அவ்வாறு உருவெடுத்ததுதான் Club House எனும் செயலி, பேசுவதற்காக, கருத்துக்களை விவாதிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு ஆடியோ(Audio based Social network) செயலி, ஒரு வருடம் முன்பாகவே Iosல் நிறுவப்பட்ட இந்த செயலி தற்போது Android லும் நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்கா சாம் ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் (Samford University)படித்த முன்னாள் மாணவர்கள் பால் டேவிட்சன் மற்றும் ரோகன் எனும் இருவரால் ஆரம்பிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளில் சக்கை போடு போட்ட இந்த செயலி தற்சமயம் இந்தியாவிலும் பிரபலமடைந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் தகவல்கள் திருடப்படுகிறது என்ற செய்தி வெளியான போது ‘நான் Signalசெயலி பயன்படுத்துகிறேன்’ என்று கூறி உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த பிரபல கார் நிறுவன CEO எலன் மஸ்க் கூறிய பிறகு Signal செயலி பிரபலமடைந்தது அதேபோல் அவர் Club House செயலியை நான் பயன்படுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்.

எல்லா செயலிகளையும் போல இந்த app யை தரவிறக்கம்() செய்து, பின் செல்போன் எண்ணை கொடுக்கும்பட்சத்தில், நமது பெயரை பதிவிட்டு அக்கவுண்ட் உருவாக்கிவிடலாம். முன்புவரை Beta version ஆக இருந்த இந்த செயலி தற்போது தன்னை பரிணமித்தது. நண்பர்கள் யாராவது Accept செய்யும்பட்சத்தில் மட்டுமே நமது அக்கவுண்ட் செயல்படத் தொடங்கும். நமது அலைபேசியில் இருக்கும் தொடர்புகளை வைத்து ரேண்டமாக நமக்கு Suggestion யை வைத்து அவர்களை நாம் பின் தொடரலாம் அல்லது நம்மை அவர்கள் பின் தொடரலாம். அக்கவுண்ட் செயல்பட தொடங்கவதில் சில சிக்கல்கள் உள்ளது என்பதுதான் பயன்பாட்டாளர்களின் கருத்தாக உள்ளது. மேலும் பொதுத்தளம் என்பதால் பல தலைப்புகளில் விவாதங்கள் (அரசியல், சினிமா, வர்த்தகம், பொருளாதாரம், கேளிக்கை, தொழில்நுட்பம் ) நடைபெற்று கொண்டிருக்கும். அந்த குழுவில்( நாம் இணைந்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என கேட்கலாம். ஒருவேளை நாம் பேச வேண்டும் என நினைத்தால் RaisetheHand எனும் வசதியை அழுத்தினால் குழுவின் அட்மின் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் நாமும் பேசலாம். புதிய குழுவை (Start Room) என நாமே தொடங்கலாம். விவாதங்களிலிருந்து நாம் வெளியேற நினைத்தால் Leave Quietly என்று வெளியே வந்து விடலாம்.

Club House ஒருவகையில் Zoom Call மற்றும் Group Chat யை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்று ஒரு நபருக்கு சென்று தனிதளத்தில் சென்று personal Chat செய்ய முடியாது. எழுவதற்கு இயலாதவர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும் மிகச்சிறந்த செயலியாக இவை உள்ளது. Club House செயலியைக் கொண்டாடி கொண்டிருக்கும் அதே சமயம் #ClubHouseParithabangal என்ற ஹேஷ்-டேக்குகளும் ட்ரெண்டாகி வருகிறது. எந்த சித்தாந்தமும் சரி, தொழில்நுட்பமும் சரி அடுத்தகட்டத்திற்கு நகரும்போது சில மாற்றங்கள் நிகழத்தான் செய்யும் ஆனால் காலப்போக்கில் புதிய வழிமுறைகளுக்குத் தகுந்தபடி தகவமைத்துக் கொள்ளாவிட்டால் அவை தோல்வியையே சந்திக்கும். Club House செயலியும் பெரும்பாலானோர் பயன்படுத்தும்போதுதான் நிர்வாக சிக்கல்கள் என்னென்ன உள்ளது எனத் தெரியும்.

-மா.நிருபன் சக்கரவர்த்தி

Advertisement:

Related posts

வறண்ட பூமியில் வெற்றிகண்ட பெண்கள்!

Saravana Kumar

பிளாஸ்டிக் இல்லாத Tea பையை அறிமுகப்படுத்திய அசாம் இளைஞர்கள்!

Jeba

தனது அறுவை சிகிச்சைக்காக ஜூஸ் விற்று நிதி திரட்டும் அமெரிக்க சிறுமி!

Gayathri Venkatesan