பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் டெண்டர்?- அண்ணாமலை

பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் டெண்டர் கொடுத்தது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய…

பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனங்களுக்கு மீண்டும் டெண்டர் கொடுத்தது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பொங்கல் தொகுப்பில் முறைகேடுகள் செய்த நிறுவனங்களுக்கே மீண்டும் ஊட்டசத்து பொருட்கள் டெண்டர் வழங்கி இருப்பது எந்த விதத்தில் நியாயம்? ஆவின் நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்காமல் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்குவதினால் அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் பதில் சொல்லுவாரா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், பொங்கல் தொகுப்பு தரம் இல்லாமல் வழங்கிய டெண்டர் நிறுவனங்களுக்கு இனி டெண்டர்கள் வழங்ப்படாது என்று கூறிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் இப்போது ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் டெண்டரை மீண்டும் அதே நிறுவனங்களுக்கு வழங்கி உள்ளார். இதனை ஏன் சுகாதாரத்துறை அமைச்சர் கேட்கவில்லை என கூறினார்.

ஊட்டச்சத்து டெண்டரை மீண்டும் அதே நிறுவனங்களுக்கு வழங்க 100 கோடி ரூபாய் பணம் கமிசனாக சுகாதாரத்துறை அமைச்சருக்கு டெண்டர் நிறுவனம் வழங்கி உள்ளது. தமிழகத்தில் பாஜக-விற்கும், அதிமுக-விற்கும் உள்ள கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. யார் யாரோ பேசுவதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.