கருமுட்டை வழக்கு; சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை

சிறுமியின் கருமுட்டை விற்றது தொடர்பான வழக்கில் சிறுமியிடம் 6 பேர் கொண்ட சுகாதார துறை அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  ஈரோடு சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிக்கு போலியான ஆதார்…

சிறுமியின் கருமுட்டை விற்றது தொடர்பான வழக்கில் சிறுமியிடம் 6 பேர் கொண்ட சுகாதார துறை அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஈரோடு சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியிக்கு போலியான ஆதார் கார்டை உருவாக்கி வயதை உயர்த்தி சிறுமியின் கருமுட்டைகளை அவரின் தாய் சுமையா, தாயின் 2வது கணவர் சையத் அலி மற்றும் புரோக்கர் மாலதி ஆகியோர் கடந்த 4 வருடங்களாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு விற்று வந்துள்ளனர். இது தொடர்பாக வழக்கில் சிறுமியின் தாய் மற்றும் கணவர், புரோக்கர், ஆதார் கார்டை திருத்தி கொடுத்த ஜான் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கருமுட்டை பெற்ற மருத்துவமனைகள் விசாரணைக்கு ஆஜராக கோரி காவல் துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த கமலக்கண்ணன், விசுவநாதன் தலைமையிலான 6 பேர் கொண்ட சுகாதாரதுறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தங்க வைப்பட்டுள்ள R.N.புதூர் சீர்திருத்த இல்லத்தில் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். சிறுமியிடம் நடைபெற்ற வாக்குமூலத்தை கொண்டு மருத்துவமனைகளில் விசாரணை செய்ய திட்டடுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதன் பிறகு சென்னை மருத்துவ இணை இயக்குநர் விஸ்வநாதன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சிறுமியிடம் பெற்ற வாக்குமூலத்தை கொண்டு  மருத்துவமனைகளிலும் விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். போக்சோ சட்டத்தின் கீழ் இந்த வழக்கு உள்ளதால் எதுவும் கூற முடியாது. இதுகுறித்து ஒரு சில மருத்துவமனைகள் மீது புகார் வந்துள்ளது. சிறுமி சில மருத்துவமனை மீது புகார் கூறியுள்ளார். அவர்களிடம் விசாரிக்க வேண்டும். வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனையின் மீது புகார் கூறியுள்ளார்கள். புகார் கூறியுள்ள மருத்துவமனைகளில் விசாரித்து தவறு உறுதி செய்யப்பட்டால் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். விசாரணையின் முடிவை அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்யப்படும். மருத்துவர்கள் மீது புகார் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.