குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர்!

ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர திமுக துணைச் செயலாளராக இருந்தவர் அருண் லால். 53 வயதான இவர்…

ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர திமுக துணைச் செயலாளராக இருந்தவர் அருண் லால். 53 வயதான இவர் நகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி  மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இவரது மனைவி தேவிப்பிரியா  ராசிபுரம் நகர் மன்றத்தின்  13 ஆவது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவர்களது மூத்த மகள் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். இளைய மகள் மோனிஷா  ராசிபுரம் தனியார் பள்ளியில்  பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று காலை இவர்களது வீட்டிலிருந்து  யாரும் வராததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். இந்த நிலையில் திமுக நகர துணைச் செயலாளர் அருன்லால், கவுன்சிலர் தேவிப்பிரியா, இளைய மகள் மோனிஷா ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், காவல் ஆய்வாளர் சுகவனம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களது தற்கொலைக்கு கடன் பிரச்னை காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.