ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியிலுள்ள சென்னை-பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் அதிவேகமாக வந்த லாரி மோதியதில் இரு சக்கர வாகனம் தீ பற்றி எரிந்ததில் ஓட்டி வந்த நபரும் தீயில் கருகி உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த சுமைதாங்கி அருகேயுள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டையை நோக்கி இரு சக்கர வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனம் லாரியின் முன் பக்கத்தில் சிக்கியதால்
தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதில் வாகனத்தை ஓட்டி வந்த நபரும் தீயில் கருகி உயிரிழ்ந்தார்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் யார்?என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
–வேந்தன்







