துணைநிலை ஆளுநரை இன்று சந்திக்கிறார் ரங்கசாமி!

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமைகோருவதற்காக, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்திக்க இருக்கிறார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி 16 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதையடுத்து,…

புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமைகோருவதற்காக, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்திக்க இருக்கிறார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி 16 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளது. இதையடுத்து, ஆட்சி அமைப்பது தொடர்பாக இரண்டு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், முதலமைச்சராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பதவியேற்க இருப்பதாகவும், இதற்காக இன்று மாலை துணைநிலை ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க அவர் உரிமை கோர இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புதிதாக பதவியேற்கவுள்ள அரசில் இடம்பெறும் அமைச்சர்கள் யார் என்பது குறித்து என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக இடையே தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.