முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை!

100 நாட்கள் கொரோனா தொற்று சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு வரும் காலத்தில் அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நாடு முழுதும் தினமும் 3 லட்சத்திற்கு அதிகமானவர்கள் தினம்தோறும் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் சதவிகிதமும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் நிலையைப் பற்றி நாம் யோசித்தேயாகவேண்டும். ஒரு நாள் முழுவதும் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து பணிபுரியும் மருத்துவரால், இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்குக்கூடக் கடினமாக இருக்கும். மாதவிடாய் நாட்களில் பெண் மருத்துவர்கள் எல்லா சிக்கலையும் சமாளித்தே இந்த உடையை அணிந்து பணிபுரிகின்றனர். மேலும் வேலைப்பழுவால் மருத்துவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளை நாம் செய்திகளாகக் கடந்து வந்திருக்கிறோம். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல்,மக்களின் நலனுக்காக உழைக்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு நிரந்த வேலைப்பற்றிய உத்தரவாதம் மிகவும் அவசியம். இந்த கொரோனா காலத்தில் துப்புரவுத்தொழிலாளர்களின் பணியும் மகத்தான ஒன்று. இந்நிலையில் பிரதமர் அலுவலகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

100 நாட்கள் கொரொனா தொற்று சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு வரும் காலங்களில் அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில். தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அமல்படுத்தப்படுமாயின் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு இது நற்செய்தியாக அமையும்.

Advertisement:

Related posts

தவறான தொடர்பு: ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த பெண்!

Saravana

தமிழகத்தில் அமலுக்கு வந்தது புதிய கட்டுபாடுகள்!

Ezhilarasan

ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா?முதல்வர் சவால்!

Karthick