புதுச்சேரியில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் எடுக்கப்பட்டுவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக மட்டும் தான் அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை காரணமாக வைத்து அவசியமின்றி பொதுமக்கள் சாலைக்கு வர வேண்டாம் என தெரிவித்தார்.. கொரோனா கட்டுபாடுகளை மீறினால் முழு ஊரடங்கு விதிக்கப்படும் எனவும் தமிழிசை செளந்தரராஜன் எச்சரிக்கை விடுத்தார்.