பரமக்குடியில் இந்து-இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய எருதுகட்டு விழா!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீபாலுடைய அய்யனார் மற்றும் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்து-இஸ்லாமிய மதத்தவர் இணைந்து எருதுகட்டு விழா நடத்தப்பட்டது. போட்டியில் சீறிப் பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்கி பரிசுகளை அள்ளிச் சென்றனர்.…

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஸ்ரீபாலுடைய அய்யனார் மற்றும் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்து-இஸ்லாமிய மதத்தவர் இணைந்து எருதுகட்டு விழா நடத்தப்பட்டது. போட்டியில் சீறிப் பாய்ந்த காளைகளை காளையர்கள் அடக்கி பரிசுகளை அள்ளிச் சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த பொட்டகவயல் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபாலுடைய அய்யனார் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் முளைப்பாரி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு திருவிழா கோலாகலமாக நடந்தேறியது. மேலும் கோயில் திருவிழாவை முன்னிட்டு கிராமத்தில் வசிக்கும் இந்து-இஸ்லாமிய பெருமக்கள் இணைந்து எருதுகட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த எருது கட்டு விழாவில் பங்கேற்பதெற்கென மதுரை,சிவகங்கை,திருச்சி என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தன.

மேலும் உடல் தகுதியின் அடிப்படையில் 200க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர். போட்டியில் துள்ளிக்குதித்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்கினர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும்,காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.