பரமக்குடி ஸ்ரீபூவலிங்க அய்யனார் கோயிலில் குடமுழுக்குவிழா!

பரமக்குடி அருகே பகைவென்றி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூவலிங்க அய்யனார் கோயிலில் குடமுழுக்குவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ளது பகைவென்றி கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீபூவலிங்க அய்யனார் திருக்கோயில். கடந்த…

பரமக்குடி அருகே பகைவென்றி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூவலிங்க அய்யனார் கோயிலில் குடமுழுக்குவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ளது பகைவென்றி கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீபூவலிங்க அய்யனார் திருக்கோயில். கடந்த சில நாட்களாக இக்கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி கடந்த 24ம் தேதி யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. மகா சாந்தி ஹோமம்,சுதர்சன ஹோமம்,முதலாம் யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நிறைவடைந்ததையொட்டி பூவலிங்க அய்யனார் மற்றும் சேமன் குதிரைகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.

தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர்  தெளிக்கப்பட்டது. இத்திருவிழாவில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்து சென்றனர்.

விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.