செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காட்டில் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், இந்தியன் வங்கி சார்பில் ஏடிஎம் மையம் திறந்து வைக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில், இந்திய
அரசு சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் அமைச்சகம் கட்டுப்பாட்டில்
இயங்கி வருகிறது, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கான
தேசிய நிறுவனம். இங்கு மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், நவீன
ஒலி மற்றும் எல்இடி தொடுதல் திரையுடன் கூடிய, மற்றவர்கள் உதவி இல்லாமல்
தாங்களே எளிதாக பயன்படுத்தும் வகையில் ஏடிஎம் மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதனை, இந்தியன் வங்கி கோவளம் கிளை சார்பில், சென்னை இந்தியன்
வங்கியின் பொது மேலாளர் ராஜேஸ்வர ரெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனத்தின் இயக்குநர் அமர்நாத் உள்ளிட்ட, வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்
ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
—கு.பாலமுருகன்







