முக்கியச் செய்திகள் தமிழகம்

அவதூறு வழக்குகளில் முதலமைச்சர் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

கடந்த ஆட்சியின்போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்க கூடாது என சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது 17 அவதூறு
வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை விசாரித்த சிறப்பு நீதிமன்றம்,
தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கடந்த ஆட்சியில் தொடரப்பட்ட 17 அவதூறு வழக்குகளை திரும்பப்பெற அரசின் சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதி நிர்மல்குமார், 17 அவதூறு வழக்குகள் தொடர்பாக சிறப்பு நீதிமன் றம் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் ஆஜராக வேண்டும் என நிர்ப்பந்திக்க கூடாது என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 8 ம் தேதி தள்ளி வைத்தார்.

 

Advertisement:
SHARE

Related posts

குன்னூர் தொகுதியில் திமுக வெற்றி!

Halley karthi

மேகதாது அணை பிரச்னை; அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

Saravana Kumar

ராகுல்காந்தி எம்.பியுடன் சிறப்பு நேர்காணல்!

Niruban Chakkaaravarthi