அதிமுக தேர்தல் அறிக்கைக்கு ராமதாஸ் வரவேற்பு!

அதிமுகவின் தேர்தல் அறிக்கை, சமூக நீதிக்கானது என்றும் அக்கட்சியின் தலைமையிலான கூட்டணி மிகப் பெரியளவில் வெற்றி பெறும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து சமூகங்களுக்கும்…

அதிமுகவின் தேர்தல் அறிக்கை, சமூக நீதிக்கானது என்றும் அக்கட்சியின் தலைமையிலான கூட்டணி மிகப் பெரியளவில் வெற்றி பெறும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து சமூகங்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அதிமுக தேர்தல் அறிக்கையின் அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது எனக் கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுகவுக்கு சமூகநீதி மீதான அக்கறையை விட, வன்னியர் சமூகம் மீதான பகைமை தான் அதிகமாக உள்ளது என அவர் சாடியுள்ளார்.

தமிழகத்தில் மதுகடைகள் படிப்படியாக மூடப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு தொடர்பான எந்த வாக்குறுதியும் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டார்.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் அக்கறையில்லாமல், மது ஆலைகளை நடத்தி லாபம் ஈட்டுவதில்தான் அவர்களுக்கு அதிக அக்கறை உள்ளது என்பதை திமுகவின் தேர்தல் அறிக்கையே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது எனக் குற்றம்சாட்டினார்.

அதிமுகவும், பாமகவும் அளித்துள்ள வாக்குறுதிகள் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கப்பட்டு, அனைவரின் ஆதரவையும் பெற்று சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றியை பெறும் என்பது உறுதி என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.