சேலத்தில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்திய ரூவாண்டா நாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இதனையடுத்து, மொரட்டாண்டி சுங்கச்சாவடியில் அந்த இளைஞரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ரூவாண்டா நாட்டை சேர்ந்த ஆல்வின் (29) எனத் தெரியவந்தது.
அதையடுத்து அவர் ஆரோவில் பகுதியில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







