ரஜினிகாந்தின் 50 ஆண்டு சாதனை -‘கூலி’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இபிஎஸ் பதிவு!

நாளை வெளியாகவுள்ள ‘கூலி’ திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

 

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்கும், நாளை வெளியாகவுள்ள அவரது ‘கூலி’ திரைப்படம் வெற்றிபெறவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ X (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “திரையுலகில் தனக்கே உரிய ஸ்டைலாலும் தனித்துவமான நடிப்பாலும், 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார், சகோதரர் ரஜினிகாந்துக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இப்பொன்விழா ஆண்டில் ரஜினிகாந்த் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘கூலி’ திரைப்படம் வெற்றியடையவும் என்னுடைய வாழ்த்துகள்” என்றும் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த வாழ்த்து, ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் ரஜினிகாந்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடி வருகின்றனர். இந்த வரிசையில், எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.