ராஜஸ்தான் ராயல்ஸ் போராடி தோல்வி – 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அசத்தல் வெற்றி!

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று…

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கைல் மயர்ஸ் 42 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி தரப்பில், ரவிச்சந்திரன் அஷ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையும் படியுங்கள் : வரலாறு காணாத வகையில் புவி வெப்ப நிலை உயர்வு – ஆய்வாளர்கள் எச்சரிக்கை…

இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகல் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 44 ரன்களும், ஜாஸ் பட்லர் 40 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணி தரப்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி, புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.