முக்கியச் செய்திகள்

வரலாறு காணாத வகையில் புவி வெப்ப நிலை உயர்வு – ஆய்வாளர்கள் எச்சரிக்கை…

2016ம் ஆண்டுக்கு பின்னர் கடல் மேற்பரப்பு வெப்ப நிலை( SST ) வரலாறு காணாத வகையில் 21 டிகிரியாக உயர்வு – பருவமழை மற்றும் காலநிலை மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுக்கும் என அமெரிக்காவின் மைனே பல்கலைக்கழக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை…

பருவநிலை மாற்றம் என்பது உலகளவில் பெரிதும் பேசக்கூடிய தலைப்பாகவே இருந்து வருகிறது என்றால் அதில் மாற்று கருத்துகள் இல்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒரு சில நாடுகளில் பருவ மழையின் தீவிரம் அதிகரித்து எண்ணற்ற சேதங்களை ஏற்படுத்துவதும் ஒரு சில நாடுகளில் முற்றிலும் பருவ மழை பொய்ப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது – புவி வெப்பமயமாதல், கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பு, நிலப்பரப்பில் வெப்ப அலை போன்ற வானிலை சார்ந்த ஆய்வுகளுக்கு உலக நாடுகள் மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாசிங்டன் மாகனத்தில் உள்ள மெய்னே பல்கலைக்கழகம் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக ஆராய்ச்சி நிறுவனத்தின் ( NOAA ) தரவுகளை அடிப்படையாக வைத்து சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடல் மேற்பரப்பு வெப்பநிலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து 21 டிகிரியாக உயர்ந்துள்ளதாக அந்த ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது – இது 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடல் மேற்பரப்பு வெப்பநிலையை விட சற்று அதிகம்.

இதன் காரணமாக பருவ மழை மற்றும் காலநிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு ஏப்ரல் தொடக்கத்தில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை 21.1 டிகிரி செல்சியசாக இருந்ததாகவும் இது 2016ம் ஆண்டை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை வேகமாக உயர்ந்து வருவதன் காரணமாக இந்திய பெருங்கடலில் மேற்பரப்பு வெப்பநிலை 29 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளதாகவும் – இது இயல்பை விட 1.2 டிகிரி செல்சியஸ் அதிகம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் காரணமாக பருவமழை தாமதமாகவோ அல்லது வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவுக்கு அதிகமாகவோ பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் மேலும் கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறைகள் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது உலகில் மிக வெப்பமான கடல் பகுதியாக இந்திய பெருங்கடல் மாறி வரும் நிலையில் இது பருவமழைக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்குறி வானிலை ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாக இருந்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram