ஆளுநர் விவகாரம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த முன்னெடுப்புக்குமம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போல பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும்…

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த முன்னெடுப்புக்குமம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போல பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

இதற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இவர்களைத் தொடர்ந்து ஸ்டாலின் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1648678160110878720?s=20

அத்துடன், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர் கூட்டத்தைக் கூட்டுமாறும் மம்தா பானர்ஜி யோசனை தெரிவித்தார்.பாஜக நேரடியாகவோ அல்லது கூட்டணியிலோ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடு குறித்து பெரும் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. மேலும், அனைத்து எதிர்க்கட்சி முதல்வர்களும் ஒன்றாக சந்தித்து  அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.